இசையால் ஏ ஆர் ரஹ்மானையே பிரமிக்க வைத்த சந்தோஷ் நாராயணின் மகள்… இசைப்புயலே பகிர்ந்த வீடியோ….

By Begam on மாசி 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் பீட்சா, சூது கவ்வும், பீட்சா 2, பில்லா, ஜிகர்தண்டா, மெட்ராஸ் உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

   

சந்தோஷ் நாராயணனின் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் ஏ ஆர் ரகுமானின் ஸ்லம்டாக் மில்லினியர் படம் தான்.பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பின்னணி இசைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் சந்தோஷ் நாராயணன். இவர் சமீபத்தில் விஜயின் பைரவா, தனுஷின் கொடி, வடசென்னை, சூப்பர் ஸ்டாருடன் காலா மற்றும் பரியேறும் பெருமாள் உள்ளிட்ட திரைப்படத்தில் இசையமைத்திருக்கின்றார்.

   

 

இவர் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு ஸ்டைலில் இருக்கும். இது அனைவருக்கும் பிடித்த வகையிலும் இருக்கும். இப்படி புகழுக்குரிய இவர் மீனாட்சி ஐயர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தீக்ஷிதா வெங்கடேசன் என்ற மகள் இருக்கிறார். இவரும் ஒரு பிரபல பாடகி தான். ‘என்ஜாயி எஞ்சாமி’ என்ற இவரது பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அடுத்தடுத்து படங்கள் மற்றும் தொடர் ஹிட் பாடல்கள் என்று பிசியாக வலம் வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Dhee (@dhee___)

இவருக்கென்று சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவருடைய பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அவர் சென்னையில் நடைபெற்ற இசைநிகழ்ச்சி ஒன்றில் ‘உசுர நரம்புல நீ சூடு ஏத்துற’ எனும் பாடலை பாட மொத்த அரங்கமும் அதிர ரசிகர்கள் அவருக்கு உற்சாகமளித்தனர். இந்த விடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் ஸ்மைல் எமோஜி ஒன்றை பதிவு செய்துள்ளார் . இதோ அந்த பதிவு…