Categories: CINEMA

மூடநம்பிக்கையை பயன்படுத்தி சம்பாதிக்க பிளான் போடும் சந்தானம்.. ஒர்கவுட் ஆச்சா..? இல்லையா..? ‘வடக்குப்பட்டி ராமசாமி’ முழு விமர்சனம்..

நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி. கவுண்டமணி-செந்திலின் பிராண்டட் காமெடி வசனமான வடக்குப்பட்டி இராமசாமி காமெடியில் இந்த பெயரை மட்டும் எடுத்து தியேட்டரில் ஒரு சிரிப்பு மத்தாப்பையே கொளுத்தியிருக்கிறார் சந்தானம்.

#image_title

ஏற்கனவே சந்தானத்தை வைத்து டிக்கிலோனா என்ற படத்தினை இயக்கிய கார்த்திக் யோகி தற்போது மீண்டும் இந்தப் படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.  ஹீரோயினாக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், நிழல்கள் ரவி, ரவி மரியா, பக்கோடா பாண்டி உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

மார்க்கெட் போனாலும் பரவாயில்லை.. அந்தக் கால லேடி விக்ரம் செஞ்ச தரமான சம்பவம்

இதற்குமுன் சந்தானம் ஹீரோவாக நடித்து வெளிவந்த படங்களிலேயே இப்படம் தான் அதிக பட்ஜெட் படமாகும். மேலும் அதிக திரையரங்குகளில் (600) ரிலீஸான சந்தானம் படமும் இதுவேயாகும். இதனால் படம் எப்படி ரசிகர்களிடத்தில் சென்று சேர்ந்திருக்கிறது என்று எதிர்பார்த்த படக்குழுவினருக்கு இனிப்பான செய்தி வந்து கொண்டிருக்கிறது. படம் முழுக்க காமெடியால் நிரம்பி வழிவதால் ரசிகர்கள் எந்தக் காட்சிக்குச் சிரித்தோம் என்பதையே மறந்து இரண்டரை மணிநேரம் திரையில் சந்தானத்துடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்து வருகின்றனர்.

#image_title

இப்படத்தின் கதையைப் பற்றிப் பார்க்கும் போது, வடக்குபட்டி கிராமத்தில் தனக்கு சொந்தமான நிலத்தில் அம்மன் கோவில் கட்டி மூட நம்பிக்கை வளர்த்து ஊர் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார் ராமசாமி. இதை தெரிந்து கொள்ளும் தாசில்தார், கோவில் வருமானத்தில் பங்கு கேட்க அதனை ராமசாமி மறுக்க ஊரில் இரண்டு குடும்பங்களை மோத விட்டு கோவிலை இழுத்து மூடி விடுகிறார் தாசில்தார். கோவிலை மீண்டும் திறக்க ராமசாமி செய்யும் தில்லாலங்கடி வேலைகள்தான் இந்த வடக்கு பட்டி ராமசாமி.

“இனி சினிமாவில் நடிக்க போவதில்லை”… கட்சியின் பெயரை அறிவித்த கையோடு சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்த விஜய்…

கடந்த வருடம் சந்தானம்நடிப்பில் வெளியான டிடி ரிட்டன்ஸ், 80’s பில்டப், கிக் ஆகிய படங்கள் போதிய அளவில் வெற்றியைச் சுவைக்காத நிலையில் மொத்தத்திற்கும் சேர்த்து இப்படத்தின் மூலம் சந்தானம் கம்பேக் கொடுத்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் படக்குழுவினர் உற்சாகமாகியுள்ளனர். மொத்தத்தில் வடக்குப்பட்டி ராமசாமி உன் பணத்துக்கு ஊ… என்பதைப் பொய்யாக்கும் விதமாக வசூலிலும் முன்னணியில் இருக்கிறது.

வடக்குப்பட்டி ராமசாமி – சிரிப்பு அலை

மதிப்பெண் 7/10

John

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

2 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

4 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

4 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

5 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

5 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

7 மணி நேரங்கள் ago