மனசு ரொம்ப கஷ்ட்டமா இருக்கு.. குடும்பத்துல முக்கியமான நபர்.. சேஷுவின் மறைவால் மனமுருகி பேசிய சந்தானம்..

By Archana

Published on:

லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலமாக மக்களிடத்தில் பிரபலமானவர் தான் நடிகர் சேஷு. இந்த நிகழ்ச்சியில் இவருடைய எதார்த்தமான நடிப்பு இவரை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தது என்று தான் சொல்ல வேண்டும். தனித்துவமான நகைச்சுவை அனைத்துத்தரப்பு மக்களையும் கவர்ந்து என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய நடிகர் சேஷுவிற்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தது.

நடிப்பை தாண்டி சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார் நகைச்சுவை நடிகர். மழைவெள்ளம் பாதிப்பின் பொது மக்களை நேரில் சந்தித்து உதவினார் நடிகர் சேஷு. மேலும், சந்தானம் நடிப்பில் வெளிவந்த A1 படத்தின் மூலமாக பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தார் நடிகர் சேஷு அவர்கள். இதனை தொடர்ந்து சமீபத்தில் ரிலீஸ் ஆனா வடக்குப்பட்டி ராமசாமி படத்திலும் நடித்திருந்தார் நடிகர் சேஷு.

   

மேலும், கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்த நடிகர் சேஷு, நேற்று மரணமடைந்தார். அவரது மறைவு ரசிகர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியது என்று சொல்லாம். அவருடைய உடலுக்கு பல முன்னணி பிரபலங்கள் அஞ்சலி செலுத்த வந்திருந்தார். மறைந்த நடிகர் சேஷு அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தார் நடிகர் சந்தானம்,

“சேஷு அண்ணன் மரண செய்தியை கேட்டு மனசைக்கு ரொம்ப கஷ்ட்டமா இருந்தது, அவர் லொள்ளு சபா குடும்பத்தில் ஒரு நபர் மாதிரி, அவருடன் சேர்ந்து நெறய படங்கள் பண்ணலாம் என்று பேசிருந்தேன், அவர் நடிகரை தாண்டி நல்ல மனிதர், அவருடைய குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று மனா வருத்தத்துடன் பேசினார் நடிகர் சந்தனம்,

author avatar
Archana