நான் இல்லன்னா நீ ஒன்னுமே இல்லை… அப்பா சொன்ன ஒருவார்த்தைதான் என் வாழ்க்கையை மாற்றியது- நடிகர் ஸ்ரீ எமோஷனல்!

By vinoth on ஐப்பசி 5, 2024

Spread the love

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளர் கூட்டணியில் ஒன்று ஷங்கர் கணேஷ் ஜோடி. தமிழ் சினிமா உலகில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளர்கள் சாதித்த நிலையில் அவர்களை அடுத்து இரட்டையர்களாக வந்து பிரபலமானவர்கள் சங்கர் கணேஷ்.

70 களிலும் 80 களிலும் இவர்கள் இணைந்து பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளனர். இளையராஜாவுக்கு முன்பே இவர்கள் இசையமைப்பாளர்களாக அறிமுகமாகி எம் ஜி ஆர் படங்களுக்கு எல்லாம் இசையமைத்துள்ளார்கள். ஆனால் இளையராஜாவின் வருகையால் தமிழ் சினிமா இசையின் போக்கு மாறியதால் இவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு இளையராஜா முதல் நிலை இசையமைப்பாளரானார்.

   

#image_title

   

இந்த இரட்டையர்கள் 90 கள் வரை பிஸியான இசையமைப்பாளர்களாக இருந்த நிலையில் கணேஷ் இறந்த பின்னரும் சங்கர் கணேஷ் என்ற பெயரிலேயே இசையமைத்து வந்தார். இவரின் மகன்தான் தற்போது தொலைக்காட்சி சீரியல்களில் நாயகனாக நடித்துக் கலக்கி வரும் ஸ்ரீ.

 

ஸ்ரீ சமீபத்தில் அளித்த நேர்காணலில் பல சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் பல ஆண்டுகள் நான்தான் சங்கரின் மகன் என்றே சொல்லவில்லை. ஏனென்றால் நான் சிறுவயதில் ஒழுங்காகப் படிக்காமல், குடிப்பழக்கத்தில் விழுந்து நிறைய பிரச்சனைகள் செய்து போலீஸ் ஸ்டேஷனில் என் மேல் கேஸ் எல்லாம் இருந்தது. அப்போது என் அப்பாதான் என்னை வெளியில் எடுத்தார். என்னை கீபோர்ட் கற்றுக் கொள்ள சொன்னார். ஆனால் நான் அதையும் செய்யவில்லை.

#image_title

கடைசியில் ஒருநாள் என்னிடம் சொன்னார். நீ சங்கர் கணேஷின் மகன் என்பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை. என் பெயரை எடுத்துவிட்டால் நீயார்? உன்னால் என் பெயரை சொல்லாமல் ஜெயித்துக் காட்ட முடியுமா என்று கேட்டார். அன்றுதான் எனக்கு உறைத்தது. அதன் பிறகுதான் நான் ஒரு சவாலாக நினைத்து நடிக்க வாய்ப்புத் தேடினேன். அப்போதுதான் அவர் சொன்னது எவ்வளவு உண்மை என்று தெரிந்தது. ஆனாலும் நான் விடாமல் முயற்சி செய்தேன். இப்போது சில தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்” எனப் பேசியுள்ளார்.