நேற்று நடைபெற்ற 5-வது டி20 போட்டியின் போது, இந்திய வீரர் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்துகொண்டிருந்த தருணத்தில் அவரது மனைவி சாருலதா சாம்சன் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார். தனது கணவர் மீண்டும் பழைய ஃபார்முக்குத் திரும்பிச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கண்களை மூடிக்கொண்டு தீவிரமாகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்த காட்சி கேமராவில் பதிவாகி அனைவரையும் நெகிழச் செய்தது.
This is what true love looks like. 🥹
Yesterday, during the 5th T20I while Sanju Samson was batting, his wife, Charulata Samson, closed her eyes and prayed to God for his comeback. Well, the comeback didn’t happen, but if you have a wife like Charulata Samson, someone who stands… pic.twitter.com/AWC808xbw1
— Mahi Patel (@Mahi_Patel_07) February 1, 2026
மைதானத்தில் சஞ்சு சாம்சன் எதிர்பார்த்த அளவிற்கு ரன்களைக் குவிக்கத் தவறினாலும், அவரது மனைவியின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு வீரரின் வாழ்வில் ஏற்றத் தாழ்வுகள் இயல்பானவை; ஆனால், அந்த இக்கட்டான காலங்களிலும் நிழலாகத் தொடர்ந்து நின்று பலம் சேர்க்கும் சாருலதா போன்ற ஒரு துணை அமைவது ஒருவருக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதம் என ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.
