“எல்லாத்துக்கும் என் சங்கீதா அண்ணிதான் காரணம்…”  ஜேசன் சஞ்சய் கேட்ட கேள்வி… சிக்மா இசை வெளியீட்டு விழாவில் ஓப்பனாக பேசிய சஞ்சீவ்…!!

By Devi Ramu on புரட்டாதி 19, 2026

Spread the love

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் சூரி, “ஜேசன் சஞ்சய் தனது தந்தை விஜய்யைப் போலவே இருக்கிறார்; விரைவில் கதாநாயகனாக நடிக்க வேண்டும்” என விருப்பம் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய ஜேசன் சஞ்சய் தனது அம்மா மற்றும் அப்பாவுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து மேடையேறிய ஜேசன் சஞ்சய்யின் சித்தப்பாவும் இப்படத்தின் இணை இயக்குநருமான சஞ்சீவ் பேசுகையில், “இந்தப் படம் உருவாக முக்கியக் காரணம் என் அண்ணி சங்கீதா தான். சஞ்சய் படித்து முடித்துவிட்டு படம் இயக்க ஆசைப்பட்டபோது அண்ணிதான் என்னை அழைத்துச் பேசச் சொன்னார்” எனக் கூறினார். மேலும், “சஞ்சய் என்னிடம் ‘என் கூடவே கடைசி வரை இருப்பியா சித்தப்பு’ எனக் கேட்டார்; அதனால் தான் இப்போது வரை அவர் கூடவே இருக்கிறேன்” எனக் கூறியது அரங்கத்தில் இருந்த ரசிகர்களை நெகிழ வைத்தது.