50 ஆண்டுகளுக்கு பின் சனியால் உருவாகும் ராஜயோகம்.. இந்த 3 ராசிக்காரர்களுக்கு கொட்டப் போகும் அதிர்ஷ்டம்..!

By Nanthini on ஆடி 10, 2025

Spread the love

வேத ஜோதிடத்தின்படி ஒவ்வொரு நவகிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவேளியில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர்கிறது. அந்த மாற்றம் மனித வாழ்வில் சுபமும் யோகங்களை உருவாக்கி பலதரப்பட்ட தாக்கங்களை ஏற்படுத்தும். அதன்படி ஜூலை 13ஆம் தேதி சனி பகவான் மீன ராசியில் வக்கிரமடைந்து பின்னோக்கி இயக்கத்தில் செல்கின்றார். இது சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் ஏற்படுத்தி நிதி வளர்ச்சி மற்றும் தொழில் முன்னேற்றம் உள்ளிட்ட பல நன்மைகளை தரும். அதன்படி கடக ராசிக்கு சனி வக்ர பலன்கள் அதிகம் கிடைக்கும். திடீர் நிதி லாபங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்ப உறவுகள் சிறப்பாக அமையும். திருமணம் ஆகாதவர்கள் வாழ்க்கை துணையை சந்திக்க கூடிய சூழல் உருவாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும். பணியிடத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

அடுத்து மகர ராசிக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆளுமை மற்றும் சமூக மதிப்பு உயரும். புதிய சாதனைகள் மற்றும் முன்னேற்றங்களை உருவாக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். மாணவர்களுக்கு பாடங்களில் வெற்றி, தேர்வுகளில் சிறந்த முடிவுகள். தொழில் செய்வோருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

   

மிதுன ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் வணிகத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். பணியிடத்தில் நல்ல வெற்றி மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள், நல்ல லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு வளர்ச்சியான வருவாய் உருவாகும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பை பெறுவார்கள். குறிப்பாக நீண்ட நாட்கள் மனதில் வைத்திருந்த ஆசைகள் நிறைவேறும்.