நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து விவகாரம், கடந்த சில மாதங்களாகவே கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சுமார் 20 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, விஜய்யின் தனிப்பட்ட செயல்பாடுகள் மற்றும் ஒரு நடிகையுடனான நெருக்கம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சர்வதேச மகளிர் தின விழாவில் விஜய் பேசிய சில கருத்துக்கள் பெண்களுக்கு எதிராக அமைந்ததாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த விவாகரத்து செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
சமீபகாலமாக விஜய் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் விதம் மற்றும் நடிகை த்ரிஷாவுடன் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து திருமண நிகழ்வில் பங்கேற்றது போன்ற செயல்கள், சங்கீதாவின் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை அவர் ரசிகர்கள் மத்தியிலேயே விதைத்துள்ளது. இவ்வளவு சர்ச்சைகள் வெடித்தும் விஜய் இதுவரை இது குறித்து நேரடியாக எந்த விளக்கமும் அளிக்காமல் மௌனம் காத்து வருகிறார். இருப்பினும், அண்மையில் நடந்த ஒரு நிகழ்வில் இந்த சர்ச்சை குறித்து அவர் மறைமுகமாகச் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டது, நெருப்பில்லாமல் புகையாது என்பதை உறுதிப்படுத்துவது போல் அமைந்தது.
இந்தச் சூழலில், வரும் ஏப்ரல் 20-ம் தேதி இவர்களது விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், மறுநாளான ஏப்ரல் 21-ம் தேதி சங்கீதா ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அன்று அவர் நேரடியாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, தனது தரப்பு நியாயங்களையும் விவாகரத்துக்கான உண்மையான காரணங்களையும் பகிரங்கமாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பு நிகழ்ந்தால், விஜய்யின் அரசியல் மற்றும் திரைப்பயணத்தில் இது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…