நடிகர் அஜித்தின் ‘அவள் வருவாளா’ படத்தில் டான்சராக அறிமுகமானவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இதைத்தொடர்ந்து இவர் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.

கிங்ஸ்லி, நயன்தாரா – நெல்சன் கூட்டணியில் உருவான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் நடிகராக திரையுலகில் கால் பதித்தார்.

இதைத்தொடர்ந்து நெற்றிக்கண், எல்கேஜி, டாக்டர், அண்ணாத்த, பீஸ்ட், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி, சதீஷின் கான்ஜூரிங் கண்ணப்பன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்திலும் அடுத்ததாக ரெடின் கிங்ஸ்லி நடித்து வருகிறார்.

இந்நிலையில் சன் தொலைக்காட்சியின் பிரபல சீரியல் நடிகையான சங்கீதாவை ரெடின் கிங்ஸ்லி மைசூரில் வைத்து திடீர் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் சின்னத்திரை, வெள்ளித்திரை வட்டாரத்தினருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. மைசூரில் தன் நெருங்கிய நண்பர்கள், நட்பு வட்டாரத்தினர் சூழ இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நடிகை சங்கீதா தனது கணவருடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை தற்பொழுது இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
