விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாநில செயலாளரான சங்கத்தமிழன், கட்சியின் ஒழுங்குமுறையை மீறியதாகக் கூறி 3 மாத காலத்திற்கு தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசிக தலைமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், கட்சிக்குள் பேசி விவாதிக்க வேண்டிய உள்விவகாரங்கள் மற்றும் முரண்பாடுகளை அவர் தொடர்ந்து பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் பேசி வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது இத்தகைய செயல்பாடுகள் கட்சித் தலைமைக்கு தேவையற்ற நெருக்கடியையும் தர்மசங்கடத்தையும் உருவாக்கி வந்ததாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கட்சியின் கட்டுக்கோப்பைக் குலைக்கும் வகையிலும், தலைமைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாகவும் செயல்பட்டதன் காரணமாகவே இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 மாத சஸ்பெண்ட் காலத்தில், கட்சியின் எந்தவொரு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கக் கூடாது என்றும், கட்சியின் பெயரையோ அல்லது பொறுப்பையோ பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் யாரும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் விசிக தலைமை அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில், மாமியாரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு ஆற்றங்கரையில் முகம் கழுவச் சென்ற மருமகனை ராட்சத முதலை…
அசாம் மாநிலம் திப்ருகரில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.4 லட்சம் பணத்தை இழந்த வாடகைதாரர் ஒருவர், தனது கடனை அடைப்பதற்காக வீட்டின்…
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்திலுள்ள பைதான் பகுதியில், பெற்ற தந்தையே தனது இரண்டு மகன்களைக் கால்வாயில் வீசிய கொடூரச்…
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிய மியா அசெவெடோ கல்லார்டோ (20) என்பவர், 17 வயது…
பீகார் மாநிலம் பெட்டியாவில் பட்டப்பகலில் பிரபல நகைக்கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த 6 முதல் 8 பேர் கொண்ட மர்ம கும்பல்,…
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவர் நவம்பர் 16-ஆம் தேதி அதிகாலை 5.45 மணியளவில் இயற்கை…