12 ஆண்டுகளுக்கு பிறகு…! விஜய் சேதுபதியின் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்கும் சாண்டி மாஸ்டர்….? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

By Devi Ramu on கார்த்திகை 19, 2025

Spread the love

இயக்குநர் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நந்திதா ஸ்வேதா, சுவாதி ரெட்டி உள்ளிட்டோர் நடித்து, 2013ஆம் ஆண்டு வெளியான வெற்றித் திரைப்படம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி பேசிய ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ வசனம் அப்போது பெரும் வரவேற்பை பெற்றது.

படம் வெளியாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில், இயக்குநர் கோகுல் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்தப் புதிய பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவில்லை. மாறாக, பிரபல நடன இயக்குநரான சாண்டி மாஸ்டர் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிக்கவுள்ளார்.

   

ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றிய சாண்டி மாஸ்டர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிக்கத் தொடங்கினார். சமீபத்தில் வெளியான ‘லியோ’, மலையாளத்தில் ஹிட்டான ‘லோகா சேப்டர் ஒன்’ போன்ற படங்களில் அவர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.

   

இருந்தாலும், விஜய் சேதுபதியின் ஹிட் படமான இதன் இரண்டாம் பாகத்தில் சாண்டி மாஸ்டர் நடிப்பது அவருக்குச் சரியாக அமையுமா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.