லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் திரிஷா இணைந்து நடித்த படம் லியோ இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்த படத்தில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் போஸ்டர்களும் பாடல்களும் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது. வருகிற 19-ஆம் தேதி லியோ திரைக்கு வர உள்ளது.
படம் ஆரம்பித்த நாள் முதலே பல்வேறு சிக்கல்கள் எழுந்தது. இந்நிலையில் லியோ படத்திலிருந்து வெளியான நான் ரெடி பாடலில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தது. இதனையடுத்து லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவும் ரத்து செய்யப்பட்டது.
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று லியோ பட ட்ரெய்லர் வெளியானது. ஆரம்பிக்கும் போதே ஒரு சைக்கோ சிரியல் கில்லரை பற்றி நடிகர் விஜய் பேசுவது போன்று ட்ரெய்லர் நகர்கிறது. பலருக்கும் ட்ரெய்லரில் வரும் அந்த சைக்கோ வில்லனை அடையாளம் தெரியவில்லை. அவர்தான் விஜய் டிவியின் பிரபல டான்ஸ் மாஸ்டர் சாண்டி.
எப்போதும் சாந்தமாக இருக்கும் சாண்டி மாஸ்டரை பார்த்துவிட்டு இப்போது லியோ பட டிரெய்லரில் சைக்கோ மாதிரி இருக்கும் சாண்டியை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் இருக்கின்றனர். லியோ படத்தில் சாண்டியும் முக்கிய வில்லனாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திரையில் சாண்டி மாஸ்டரின் சைக்கோ த்ரில்லர் காட்சிகளை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…
தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…
சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…