#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் G.O.A.T திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் சூட்டிங் வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் கேப்டன் விஜயகாந்தின் மறைவை கேள்விப்பட்டதும் உடனடியாக சென்னை வந்தார்.
#image_title
டிசம்பர் 28ஆம் தேதி சென்னை வந்த அவர் கேப்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடலை பார்த்து நடிகர் விஜய் கலங்கி நின்ற வீடியோ கூட இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தில் தவித்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியும் உதவி செய்தார்.
நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பி நடிகர் விஜய்க்கு நடந்த சம்பவம் நம் அனைவருக்கும் நியாபகமிருக்கும். அவரை பார்த்து ‘வெளியே போ’ என்று விஜயகாந்த் ரசிகர்கள் முழக்கமிட்டனர். அது மட்டுமின்றி நடிகர் விஜயின் மீது செருப்பும் கழட்டி வீசப்பட்டது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் ‘ தென் சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.அந்த புகாரில் ‘தளபதி விஜய் அவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் பொது இடத்தில் காலணி கழட்டி எறிந்தது சம்பந்தமாக புகார் மனு அளிப்பதாகவும், இது போன்ற அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட அந்த நபரை கண்டுபிடித்து அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் கூறப்பட்டுள்ளது. இதோ அந்த புகார்…
#image_title
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…