வனத்துறை செக்போஸ்ட் அருகே பயங்கரம்… அதிகாரிகளின் கார் மீது மோதி தப்பிய மணல் லாரி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

By Swetha on ஐப்பசி 8, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம், பஸ்ரா மற்றும் தத்வாய் இடையே உள்ள வனத்துறை சோதனைச் சாவடி அருகே பயங்கர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. மந்திரி சீத்தக்கா பகுதியில் மணல் ஏற்றி வந்த மாஃபியா லாரி ஒன்று, அப்பகுதியில் அதிவேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து இரண்டு வாகனங்கள் மீது பலமாக மோதி கோர விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணித்த டிசிஎம் வாகனம் மீது மணல் லாரி முதலில் மோதியது. பின்னர் அங்கிருந்து நிற்காமல் தப்பிச் செல்ல முயன்ற அந்த லாரி, வருவாய்த் துறைக்குச் சொந்தமான மற்றொரு கார் மீதும் சற்றும் எதிர்பாராத விதமாக பலமாக மோதியுள்ளது.

   

https://twitter.com/TeluguScribe/status/2108145856721625572/video/1

   

இந்த கொடூர சம்பவத்தில் டிசிஎம் வாகனத்தில் பயணித்த இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காரில் இருந்த வருவாய்த் துறை ஊழியர்கள் இருவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான லாரி ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.