மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கிய நடிகை சனம் செட்டி 2012 ஆம் ஆண்டு வெளியான அம்புலி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், செல்வந்தன், கதகளி மற்றும் வால்டர் போன்ற பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தர்ஷனை காதலித்ததாகவும் இருவருக்கும் இடையே ரகசிய நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் தன்னை சுத்தமாக கண்டு கொள்வதே இல்லை என்று மீடியாக்கள் முன்பு சனம் செட்டி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் எப்போதும் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக பேசும் சனம் செட்டி ஜனநாயகம் பட குழு மீது தன் அதிருப்தியை தெரிவித்துள்ளார். அதாவது விஜயின் ரசிகையாக இவர் தளபதியுடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஜனநாயகன் திரைப்படம் விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால் அந்தப் படத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என கடுமையாக முயற்சித்துள்ளார். யார் யாரையோ பிடித்து ஒரு உதவி இயக்குனரின் போன் நம்பரை வாங்கி அந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளார்.

ஆனால் வாய்ப்பு இப்போது தரேன் அப்போ தாரேன் என இழுத்தடித்து பின்பு வாய்ப்பு இல்லை என அந்த இயக்குனர் கூறிவிட்டாராம். கடந்த நான்கு மாதங்களாக சனம் செட்டி ஜனநாயகன் படத்தில் நடிக்க முயற்சித்து கடைசி நேரத்தில் அவர் வாய்ப்பு இல்லை என கூறி விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த தகவலை எப்படியாவது விஜய் இடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வீடியோவை பதிவிடுவதாக அவர் கூறியுள்ளார். தளபதியின் பார்வைக்கு இந்த வீடியோவை கொண்டு போக வேண்டும் என கூறியுள்ள சனம் செட்டி தற்போது அந்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
As an #Actress and as a Diehard #Fangirl of our beloved #Thalapathi it breaks my heart to post this video 💔
BUT it is necessary to bring this issue to his notice since I have not received any response from #JanaNayagan team so far.
Kindly do the needful @actorvijay sir 🙏… pic.twitter.com/IhTlLYxOK1— Sanam Shetty (@ungalsanam) May 1, 2025
