பொதுவாகவே பக்தி படங்களுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் இருந்து வருகிறது. குறிப்பாக சிவன் பெருமாள் ராமர் அனுமன் போன்ற கடவுள்களின் பெருமைகளை பேசும் கதைகள் வட இந்தியாவில் அதிகளவில் உருவாகி வெற்றி பெறுகின்றன. ராமர் சீதை பற்றிய படங்களும் அதிகமாக வருகின்றன.
அதே போல் தமிழிலும் சிவன் பெருமாள் முருகன் ஐயப்பன் ஆதிபராசக்தி மீனாட்சி அம்மன் காமாட்சி அம்மன் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் சமயபுரம் மாரியம்மன் சார்ந்த பக்தி படங்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில் முருகப் பெருமானை மையப்படுத்திய பக்தி படம் பான் இந்தியா படமாக பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. இந்த படத்தை இயக்குனர் சமுத்திரக்கனி டைரக்ட் செய்ய உள்ளார்.
