தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் சமுத்திரக்கனி. 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்த சமுத்திரக்கனி திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று பல்வேறு சவால்களை மேற்கொண்டு வெற்றியை ருசித்தவர். திரைத் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று பல்வேறு சவால்களை மேற்கொண்டு வெற்றிகனியை ருசித்தவர். இயக்குனர் கே பாலச்சந்தரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய சமுத்திரக்கனி 2003 ஆம் ஆண்டு வெளியான உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அவரது இயக்கத்தில் வெளியான முதல் படத்திற்கு சிறந்த கதைக்கான தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்ட் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் நடிகரும் இயக்குனருமான சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படமும் நல்ல வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து அரசி மற்றும் இதோ பூபாலன் போன்ற சீரியல்களை இயக்கியது மட்டுமல்லாமல் ஜன்னல் மற்றும் மர்ம தேசம் போன்ற சீரியல்களிலும் சமுத்திரக்கனி நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான அப்பா மற்றும் சாட்டை போன்ற திரைப்படங்கள் நடிகர் என்பதை தாண்டி இவரை வேறு தளத்திற்கு கொண்டு சென்றன.
குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்த விசாரணை திரைப்படத்திற்காக சமுத்திரக்கனிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இப்படி பல்வேறு பாராட்டுக்களும் விருதுகளும் கிடைத்திருந்தாலும் எப்போதும் மிகவும் எளிமையாகவே அனைவரிடத்திலும் பழகும் குணம் கொண்டவர். இவர் 2003 ஆம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் திரைப்படத்திற்கு கதை ஆசிரியராக பணியாற்றி திரைத்துறையில் அறிமுகமானார். தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லனாக நடித்து வருகின்றார்.
இந்நிலையில் சமுத்திரக்கனி வெள்ளித்திரைக்கு வருவதற்கு முன் சின்னத்திரையில் பல சீரியல்களை இயக்கியுள்ளார். அப்படி இவர் இயக்கிய சீரியல் தான் ரமணி Vs ரமணி பார்ட் 2. இந்த சீரியலில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளார் சமுத்திரக்கனி. அந்த காட்சியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அதிமுக இடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது. சமீபத்தில்…
உத்தரப்பிரதேச மாநிலம் பெரோசாபாத் மாவட்டத்தில், குடிபோதைக்கு அடிமையான தந்தை ஒருவன் தனது 12 வயது மகனை கத்தியால் குத்திக்கொலை செய்து,…
தமிழக அரசியலில் 'என்ஜின்' குறித்த விவாதம் தற்போது அண்ணாமலை மற்றும் விஜய் இடையேயான வார்த்தைப் போராக உருவெடுத்துள்ளது. தமிழக வெற்றிக்…
தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஏற்படுத்தி வரும் தாக்கம் குறித்து பாஜகவின் டெல்லி தலைமைக்கு…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், காங்கிரஸ் கட்சி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி…
தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) மீதான ஆர்வம், இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில்…