Categories: சினிமா

விஜயகாந்த் மாதிரி ஷூட்டிங்ல யாரும் அதை பண்ணமாட்டாங்க… உண்மையை பகிர்ந்த ஜாகுவார் தங்கம்…

Spread the love

விஜயகாந்த் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர். தனக்கென ஒரு தனி வழியையே வைத்திருந்தவர். நடிப்பு மட்டுமல்லாமல் இயக்குனர் தயாரிப்பாளர் அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவர் விஜயகாந்த். மதுரையில் பிறந்து வளர்ந்த விஜயகாந்த் அவர்களின் இயற்பெயர் விஜயராஜ் அழகர்சாமி நாயுடு என்பதாகும்.

சிறுவயதிலிருந்தே படிப்பில் கவனம் செலுத்தாமல் தமிழ் சினிமாவில் அதிக ஆர்வம் கொண்டிருந்த விஜயகாந்த் சென்னைக்கு குடி பெயர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தார். ஆனால் ஆரம்பத்தில் அவர் சந்தித்தது எல்லாமே அவமானம் மட்டுமே. கருப்பாக இருக்கிறார் என்பதை காரணம் காட்டி பல இயக்குனர்கள் இவரை நிராகரித்தனர். கடும் போராட்டத்திற்கு பிறகு 1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதற்கு அடுத்து 1980களில் முற்பகுதியில் குறைந்த பட்ஜெட் படங்களில் நடித்து வந்த விஜயகாந்த் பின்னர் தனது நண்பர் ராவுத்தர் தயாரிப்பில் நடிக்க ஆரம்பித்தார். 1990களில் இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். போலீசாக அதிரடியாக பல திரைப்படங்களில் நடித்ததால் இவருக்கு கேப்டன் என்ற பெயரை மக்கள் வழங்கினார்கள். வைதேகி காத்திருந்தாள், பூந்தோட்ட காவல்காரன், செந்தூரப்பூவே, சின்ன கவுண்டர் போன்ற திரைப்படங்களில் தனது அபாரமான நடிப்பை வெளிபடுத்தி இருப்பார் விஜயகாந்த்.

விஜயகாந்த் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி ஒரு மாமனிதர் நல்ல மனிதராவார். இவரது ஆபீசுக்கு செல்லும் அனைவருக்கும் வயிறார சாப்பாடு போட்டு அனுப்புவார் விஜயகாந்த். அது மட்டுமல்லாமல் நடிகர் முதல் ஒரு பட சூட்டிங் கடை கோடி ஊழியர் வரை அனைவருக்கும் சமமான உணவு வழங்க வேண்டும் என்ற புதிய முறையை கொண்டு வந்தவர் விஜயகாந்த் தான். அவரது குணங்களில் ஒன்றை ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஒரு நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.

ஜாக்குவார் தங்கம் கூறியது என்னவென்றால் விஜயகாந்த் சார் சூட்டிங்ல எல்லாரையுமே அன்பா நடத்துவாரு. எதுவும் ஒரு பிரச்சனைனா உடனே இறங்கி வருவது அவராத்தான் இருக்கும். ஸ்டன்ட் விஷயங்கள்ல நிறைய அவரே பண்ணனும்னு ரொம்ப ஆசைப்படுவாரு. எங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டு அவர் பண்ணுவாரு. அப்படி இல்லாம ஒரு சில ஸ்டண்ட் விஷயங்களாகட்டும் இந்த தீயில் போறது எறங்குறது அந்த மாதிரி நேரத்துல நாங்க மாஸ்டர் எல்லாரும் நடிச்சு கிட்டு இருக்கும்போது அங்க ஓரத்துல அந்த தீயணைப்பு வீரர்கள் வச்சிருக்கிற டியூபை கையில வச்சுக்கிட்டு விஜயகாந்த் சார் ரெடியா நிப்பாரு. எப்பவுமே எங்களை கவனிச்சுக்கிட்டே இருப்பார் எங்களுக்கு ஏதும் ஆபத்து நடந்திட கூடாதுன்னு பாத்துகிட்டே இருப்பாரு. அந்த மாதிரி ஷூட்டிங்ல அவரை தவிர வேற யாருமே பண்ணினதா நான் கேள்விப்பட்டதே இல்ல என்று விஜயகாந்தை பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார் ஜாக்குவார் தங்கம்.

admin

Recent Posts

விபத்துனு நினைச்சா பெருங் கொள்ளை… சினிமா பாணியில் அரங்கேறிய ரூ.14 லட்சம் ஸ்கெட்ச்… நடுரோட்டில் மோதிய ஸ்கூட்டர்… வெளியானது அதிர்ச்சி CCTV…!!

டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago

“என் பொண்ணு கூட பழகுவியா?”… நள்ளிரவில் வீடு புகுந்து வெறிச்செயல்… மகளின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய தந்தை… வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…

8 மணத்தியாலங்கள் ago

“பைக்கும் செயினும் தரலையா?”… பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர்… வரதட்சணை கேட்டு கொடுமை… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…

8 மணத்தியாலங்கள் ago

“அம்மா நான் எந்த தப்பும் பண்ணல!”… கதறிய மகள்… கருவி சொன்ன பொய்… ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து கதறி அழுத தாய்… மருத்துவமனையில் உடைந்த மர்மம்…!!

வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…

8 மணத்தியாலங்கள் ago

அதிசயமா? தெய்வத்தின் அவதாரமா?… ஆற்றில் கிடைத்த விசித்திர தாடைக்கல்… சாமி என திரண்டு வணங்கும் மக்கள்… நடந்தது என்ன?…!!

மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…

8 மணத்தியாலங்கள் ago

வீடு திரும்பாத தந்தை… துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல்… சகோதரிகளுக்கு நேர்ந்த கொடூரம்… அதிரடி வேட்டையில் சிக்கிய காமுகர்கள்…!!

பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…

8 மணத்தியாலங்கள் ago