இனி வங்கி செயலியை ஓபன் பண்ணும் போது பயப்பட வேண்டாம்.. அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது.. Samsung புதிய மாடலின் சூப்பர் அப்டேட்..!

By Meena on ஆவணி 20, 2025

Spread the love

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் சீரிஸ் உலகின் மிகவும் பிரபலமான ஃபிளாக்ஷிப் ஆண்ட்ராய்டு போன்களில் ஒன்றாகும். சாம்சங் ஆனது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தனது புதிய தலைமுறை ஸ்மார்ட் ஃபோன்களை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் s26 குறித்த தகவல்கள் இணையதளத்தில்  பரவி வருகின்றன. சாம்சங் நிறுவனம் பிளக்ஸ் மாஜிக்  பிக்சல் தொழில்நுட்பத்தை கேலக்ஸி s26 அல்ட்ரா ஸ்மார்ட் போனில் பயன்படுத்தலாம் என்று தெரிகிறது.

இந்த ஆண்டில் நடைபெற்ற Mobile world congress கண்காட்சியில் இந்த தொழில்நுட்பம் காட்சிக்காக வைக்கப்பட்டது. பிளக்ஸ் மாஜிக் பிக்சல் தொழில்நுட்பம் பயனர்கள் பொது இடங்களில் வங்கி செயலிகள் போன்ற ரகசியமான செயலிகளை திறக்கும் போது போனின் திரையின் பார்வை கோணங்களை மாற்றி அமைக்க ஏ ஐ பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன் மூலம் அருகில் இருப்பவர்கள் இது  என்ன காட்டுகிறது என்பதை பார்க்க முடியாமல் தடுக்கிறது. இது பயனர்களுக்கு அதிக ரகசிய தன்மையை வழங்குகிறது.