வெறும் 2 சமோசாவுக்கு ஸ்மார்ட் வாட்சை அடித்து பிடுங்கிய வியாபாரி… அடுத்து நடந்த அதிர்ச்சி… வைரலாகும் வீடியோ…!

By Nanthini on ஐப்பசி 22, 2025

Spread the love

சமோசா வியாபாரி ஒருவர் இளைஞரிடம் அடாவடி செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் ரயில் நிலைய பிளாட்பார்மில் சந்தீப் குப்தா என்பவர் சமோசா கடை வைத்திருக்கிறார். ரயில்வேயின் உரிய அனுமதி பெற்று அந்த கடையை அவர் நடத்தி வருகின்றார். இதனிடையே ஸ்டேஷனில் வந்து இறங்கிய ரயில் பயணி ஒருவர் சமோசா கடைக்கு சென்று சமோசா வாங்கி விட்டு போன் பே மூலமாக பணம் செலுத்த முயன்றார். ஆனால் அதில் பணம் செல்லவில்லை. அப்போது ரயில் புறப்பட்டதால் அந்த வாலிபர் சந்தீப் குப்தாவிடம் அடுத்து வரும் போது பணம் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் அவரை விடாத சந்தீப் காலரைப் பிடித்து இழுத்து பணம் தந்து விட்டு செல்லும்படி கூறி அடாவடி செய்துள்ளார். உடனே அந்த வாலிபர் தனது கையில் அணிந்திருந்த ஸ்மார்ட் வாட்சை கழற்றி கொடுத்துள்ளார். அந்த வாட்ச் விலை அதிகம் என்பதால் கூடுதலாக இரண்டு சமோசாக்களை அந்த வாலிபருக்கு சந்தீப் குப்தா வழங்கியுள்ளார். பிறகு அந்த வாலிபர் அங்கிருந்து புறப்பட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் அந்த சமோசா கடைக்காரர் கைது செய்யப்பட்டார். அது மட்டுமல்லாமல் ரயில்வே ஸ்டேஷனில் அவர் சமோசா விற்க வழங்கப்பட்ட லைசென்ஸ் சதுரடியாக ரத்து செய்யப்பட்டது.