இப்படிகூடவா பண்ணுவாங்க…. “வயிற்றுக்குள் ஒளித்து வைத்த 3.5 கிராம் தங்கம்”… எக்ஸ்ரே-வில் சிக்கிய இளம்பெண்ணின் பகீர் திருட்டு….!

Spread the love

கேரளாவில் ஒரு தனியார் மருத்துவமனையில் 2 வயது குழந்தையின் தங்கச் சங்கிலியைத் திருடி, அதனைத் தனது வயிற்றுக்குள் விழுங்கி மறைக்க முயன்ற பெண்ணின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலப்புரம் மாவட்டம் மம்பத் பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர், தனது பெண் குழந்தையை நீலம்பூரில் உள்ள கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வராண்டாவில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது, அதன் கழுத்திலிருந்த மூன்றரை கிராம் தங்கச் செயின் திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த தாய், அந்தப் பகுதி முழுவதும் தேடியும் நகை கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது, ஒரு இளம்பெண் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிக் கொண்டிருந்ததாகத் தெரிவித்தனர். அந்தப் பெண்ணிடம் தாய் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துத் தப்பிக்க முயன்றார். இதனால் சந்தேகமடைந்த அங்கிருந்தவர்கள் மற்றும் குழந்தையின் தாய் உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்தப் பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது தான் திருடவில்லை என அந்தப் பெண் பிடிவாதமாக மறுத்த போதிலும், போலீசாரின் சந்தேகம் தீரவில்லை. இதையடுத்து அவரை கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தனர். அப்போது அனைவரையும் அதிரவைக்கும் விதமாக, காணாமல் போன தங்கச் சங்கிலி அந்தப் பெண்ணின் வயிற்றுக்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. விசாரணையில் அந்தப் பெண் நீலம்பூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதான சமீனா என்பது தெரியவந்தது.

வயிற்றுக்குள் இருந்த நகையை வெளியே எடுக்க மருத்துவர்கள் முதலில் இனிமா கொடுத்து முயற்சி செய்தனர். பலமுறை முயன்றும் நகை வெளியே வராத நிலையில், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மாற்று மருத்துவ முறைகள் மூலம் நகை பாதுகாப்பாக மீட்கப்பட்டது. குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவது போல நடித்து, நகையைத் திருடி வயிற்றுக்குள் விழுங்கிய சமீனாவின் இந்த நூதனத் திருட்டுச் சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

FLASH NEWS: சீமானுக்கு ஆதரவு கிடையாது…. கடைசி நேரத்தில் கைவிரித்த திமுக…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில்…

2 minutes ago

ஐயோ கொடுமையே… ரீல்ஸ் மோகத்தால் சீரழியும் இளைஞர்கள்… இந்தியாவை உலுக்கிய ஐ.எஸ்.ஐ-யின் அதிர்ச்சி வலைப்பின்னல்… இணையத்தில் வைரல்…!!

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஷெஹ்சாத் பாட்டி தலைமையிலான தீவிரவாத வலைப்பின்னல், இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து…

6 minutes ago

திடீர் திருப்பம்… ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறதா அதிமுக – பாஜக?…. ரூட்டை மாத்தும் தவெக…. பரபரப்பை கிளப்பிய நயினார் நாகேந்திரனின் அதிரடி அறிக்கை…!

ஆளுங்கட்சியின் நிர்வாக திறனின்மையை மூடிமறைக்கவே எதிர்க்கட்சிகள் மீது வீண் பழிகளைச் சுமத்துவதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமாக விமர்சித்துள்ளார்.…

7 minutes ago

மருத்துவமனையில் VS பாபு… 40 நாட்களாகத் தொடரும் மர்மம்…. வாய்திறக்க அஞ்சும் அமைச்சர்கள்….. வெளியான பரபரப்பு தகவல்….!

வி.எஸ். பாபு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர்…

11 minutes ago

குஷியோ குஷி…. தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ரேஷன் கடைகளிலும்… காலையிலேயே அரசு சூப்பர் குட் நியூஸ்….!

தமிழகம் முழுவதும் இன்று (நவம்பர் 6) அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

15 minutes ago

என் மகளின் உயிரை எடுத்தவளுக்கு எப்படி ஜாமீன்?… கதறும் தாயின் கண்ணீருக்கு… நீதி வழங்கிய உயர் நீதிமன்றம்…!!

ட்விஷா ஷர்மா மரண வழக்கில் முக்கியக் குற்றம் சாட்டப்பட்டவரான கிரிபாலா சிங்கின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

18 minutes ago