“என் பொண்டாட்டியை அந்த நிலைமையில பார்க்க முடில”…. 10 வயது மகளுடன் மொத்த குடும்பமும் தற்கொலை…. கோவையை உலுக்கிய சோகம்…!

Spread the love

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே மனைவியின் தீராத உடல்நலக் குறைவால் மனமுடைந்த மின்வாரிய அதிகாரி ஒருவர், தனது மனைவி மற்றும் மகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கதிர்நாயக்கன்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்த கமலேஷ் (48), தனது மனைவி இலக்கியா மற்றும் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது மகள் எக்ஷிதா ஏஞ்சலுடன் வசித்து வந்தார்.

கமலேஷின் மனைவி இலக்கியா நீண்ட நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, பல்வேறு சிகிச்சைகள் அளித்தும் குணமாகாமல் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மனைவியின் வேதனையையும், குடும்பத்தின் எதிர்காலத்தையும் எண்ணி மிகுந்த மன உளைச்சலில் இருந்த கமலேஷ், தீவிரமான முடிவை எடுத்துள்ளார். நேற்று இரவு தனது மனைவி மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்ததுடன், தானும் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளார்.

இந்த விபரீத முடிவை எடுக்கும் முன், தனது நிலையை விளக்கி கமலேஷ் ஒரு வீடியோவை பதிவு செய்து நண்பர் ஒருவருக்கு அனுப்பியுள்ளார். இன்று அதிகாலை அந்த வீடியோவை பார்த்த நண்பர் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மூவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த உருக்கமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

லாட்ஜ் அறைக்குள் ரத்த வெள்ளத்தில் இளம்பெண்.. தூக்கில் இளைஞர்… இளைய சமூகத்தை உலுக்கும் சம்பவம்… சென்னையில் ஒரு ‘லைவ்’ கிரைம் த்ரில்லர்…!!!

சென்னை பெரியமேடு குமாரப்பா தெருவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில், நேற்று காலை அறை எடுத்துத் தங்கிய இளம்…

11 minutes ago

மதுரை அன்னைக்கு பெயர் சூட்டியது யார்.. ? ஏன் பச்சை நிறம்..? செய்யும்? மீனாட்சி அம்மன் பற்றிய 5 அதிசய தகவல்கள்…!!

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மனின் உண்மையான பெயர் 'தடாதகை' என்பதாகும். மலையத்துவஜ பாண்டிய மன்னனின் யாகத்தில் மூன்று மார்புகளுடன்…

19 minutes ago

“விடிய விடிய அழுது தீர்த்தேன்…” எதிர்நீச்சல் நந்தினியின் சிரிப்புக்கு பின்னால் இவ்வளவு ரத்தக் கண்ணீரா?.. முதல்முறையாக மௌனம் கலைத்த ஹரிப்பிரியா…!!!

சின்னத்திரையில் 'கனா காணும் காலங்கள்' மூலம் அறிமுகமாகி, தற்போது முன்னணி சீரியல் நடிகையாக வலம் வரும் ஹரிப்பிரியா, தனது தனிப்பட்ட…

23 minutes ago

எம்.ஜி.ஆரின் நிழல்…. தமிழகத்தின் மூத்த அமைச்சர்…! வியக்க வைக்கும் டாக்டர் ஹண்டேவின் அரசியல் பயணம்…!!

தமிழகத்தின் மூத்த அரசியல் ஆளுமையும், முன்னாள் அமைச்சருமான 99 வயது டாக்டர் எச்.வி. ஹண்டே, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில்…

32 minutes ago

“சொந்த மகளையே திருமணம் செய்து தந்தை… மேலும் மருமகளுடன் குழந்தை”… அமெரிக்காவையே அலறவிட்ட மார்கஸ் வெஸ்ஸனின் பகீர் பின்னணி…!!!

மார்கஸ் வெஸ்ஸன் (Marcus Wesson) எனும் கொடூர மனிதனின் இந்தச் செயல், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தையே உலுக்கிய ஒரு கருப்பு…

39 minutes ago

ட்ரம்ப்பின் ‘Gold Card’ ரகசியம்..10,000 விண்ணப்பங்கள்… ஆனால் ஒருவருக்கு மட்டும் அனுமதி… ட்ரம்ப் கொடுத்த மெகா ஷாக்…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகப்படுத்திய 'கோல்ட் கார்டு' (Gold Card) விசா திட்டத்தில், இதுவரை…

49 minutes ago