Ex கணவரின் திருமணம்… “Love You” என்று அந்த நபரை Tag செய்த சமந்தா… வைரலாகும் பதிவு..!

By Soundarya on மார்கழி 5, 2024

Spread the love

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை தான் நடிகை சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்  விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களோடு நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கின்றார். நடிகர் நாக சைதன்யா கடந்த 2017 ஆம் வருடம் சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண வாழ்க்கை ஆனது நான்கு வருடத்தில் முடிவுக்கு வந்து விவகாரத்தை பெற்று பிரிந்து விட்டார்கள். பின்னர் நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார்.

#image_title

அதனால், சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என்றும் அறிவித்தார். தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நோயிலிருந்து  மீண்டு வந்த இவர் இரண்டு திரைப்படங்களில் கமிட்டாகி நடித்தார். சாகுந்தலம், குஷி என இந்த இரண்டு படங்களும் அந்த அளவுக்கு வரவேற்பை கொடுக்கவில்லை. சினிமாவில் இருந்து ஒதுங்கிய இவர் வெளிநாடுகளுக்கு செல்வது போன்ற விஷயங்களை செய்தார்.

   
   

 

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.  இதற்கிடையில் சமந்தாவை நாகசைதன்யா பிரிந்த நிலையில் சோபிதா துலிபாலவை காதலித்து வந்தார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயமும் நடைபெற்றது. நேற்று திருமணம் இருவீட்டார் குடுமப்த்தினர் முன்னினலையி கோலாகலமாக நடந்து முடிந்தது.

இந்நிலையில் நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நிக்கோல் டோஸ் என்பவர் சமந்தாவை அண்ணி என்று குறிப்பிட்டு I Love You Mine என்று பதிவு போட்டுள்ளார். அந்த ஸ்டோரியை ஸ்கீரின்ஷாட் எடுத்து சமந்தா ” Love You நிக்கோல் டோஸ் ” பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.