‘குஷி’ பட ப்ரோமோஷனில் தன்னைவிட இரண்டு வயது குறைவான நடிகருடன்…மேடையில்  நெருக்கம்  காட்டிய சமந்தா… வைரலாகும் வீடியோ…

By Samrin on ஆவணி 17, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவர்  நடிகை சமந்தா. இவர் தமிழில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். அதை தொடர்ந்து இவர் தமிழில் ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார்.  சிறிது காலமாக நடிகை  சமந்தா சினிமாவுக்கு பிரேக் கொடுத்து இருந்தார். தற்போது ஏற்கனவே நடித்த ‘குஷி’ திரைப்பத்தின்  ப்ரோமோஷன் நிகழ்ச்சியும் தற்போது நடைபெற்று இருக்கிறது.

   

இப்படத்தில்நடிகை  சமந்தா கதாநாயகியாகவும்  மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்துள்ளார் .நடிகை சமந்தா மற்றும் விஜய்  தேவரகொண்டா ஜோடியாக நடிக்கும் இது இரண்டாவது திரைப்படமாகும்.இதற்குமுன் மகாநட்டி திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. குஷி வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

   

 

ஏற்கனவே, இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது  ப்ரோமோஷன் நிகழ்ச்சியில்  சமந்தா – விஜய் தேவரகொண்டா நெருக்கமாக டான்ஸ் ஆடிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் நேற்றிலிருந்து வைரலாகி வருகிறது. நடிகை சமந்தாவை விட இரண்டு வயது குறைவானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா   என்பது  குறிப்பிடத்தக்கது.