நடிகை சமந்தா புதுவிதமான தெரபியில் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான இவர் தமிழில் ஒரு முன்னணி நடிகையாக வர தொடங்கினார். தமிழில் பிரபலமான அதே சமயத்தில் தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்த இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தார்.
தமிழில் பிரபல நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கின்றார். இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் நான்கு வருடங்கள் கழித்து இவர்கள் விவாகரத்து பெற்று பிறந்தனர்.
விவாகரத்துக்கு பிறகு உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சமந்தா நடிப்பதை குறைத்து விட்டு சிகிச்சை, சுற்றுலா, ஆன்மீகம், உடற்பயிற்சி என ஆர்வம் காட்டி வருகின்றார். நடிகை சமந்தா தமிழில் கடைசியாக நடித்த திரைப்படம் காத்துவாக்குல இரண்டு காதல். இந்தி திரைப்படம் தமிழ் ரசிகர்களையும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
உடல்நல சிகிச்சைக்காக பல வெளிநாடுகளுக்கு சென்று வரும் இவர் அண்மையில் ரெட் லைட் தெரப்பியை எடுத்துக்கொண்டார். இதன் மூலம் சருமத்தில் உள்ள திசுக்களை புதுப்பிக்க முடியும் என கூறப்பட்டது. இந்த தெரபி தனது வளர்ப்பு பூனையுடன் நடிகை சமந்தா எடுத்திருந்தார். அதனை தொடர்ந்து கொலாஜன் படுக்கை என்ற தெரபியை மேற்கொண்டு இருக்கின்றார்.
தோல் மற்றும் இளமை தோற்றத்தை ஊக்குவிப்பதற்காக இந்த சிகிச்சையை எடுத்து இருக்கின்றார். ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து உடலில் உள்ள வியாதியை குணப்படுத்தி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துமாம். மேலும் வீக்கத்தை குறைக்க வலியை குறைக்க தேவையான அனைத்து ஆற்றல்களையும் கொடுக்குமாம். இதனை அவர் மிக மகிழ்ச்சியாக செய்கிறேன் என்று அந்த வீடியோவில் வெளியிட்டு இருந்தார் . நடிகை சமந்தா தற்போது சிட்டாட்டல் இந்தியா என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram