தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகரான விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்திற்கு பிறகு பெருமளவு ரசிகர்களை ஈர்த்தார். இவரது நடிப்பில் வெளிவந்த கீதா கோவிந்தம் படம் சூப்பர் ஹிட் ஆனது. அடுத்தடுத்து விஜய் தேவரகொண்டா நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் கடந்த 2022-ஆம் ஆண்டு பூரி ஜெகன்னா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான லைகர் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு சமந்தா இணைந்து நடித்த குஷி திரைப்படம் ரிலீஸ் ஆனது. அந்த படத்தை இயக்குனர் சிவா நிறுவனம் எழுதி இயக்கியுள்ளார்.
அந்த படத்தில் ஜெயராம், ரோகிணி, லட்சுமி, சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குஷி படத்திற்கு பேஷம் அப்துல் இசை அமைத்துள்ளார். ஃபேமிலி என்டர்டைன்மென்ட் ரொமான்டிக் காமெடி படமாக இருந்த குஷி படத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் ஒரு பேட்டி அளித்திருந்தனர். அந்த பேட்டியில் சமந்தா கூறியதாவது, விஜய் தேவரகொண்டாவிற்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. முதலில் அதைக் கேட்கும் போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எல்லா விஷயத்திலும் அவர் Perfect- ஆக இருப்பார். முதலில் என்னால் அதை நம்ப முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
View this post on Instagram
