தினமும் 3 பரோட்டா, இனிப்பு எல்லாம் சாப்பிட்டும்.. 89 வயதில் இன்னும் பிட்டாக இருக்கும் தந்தை.. சல்மான் கான் சொன்ன சீக்ரெட்..!

By Divyamayakannan on ஆவணி 8, 2025

Spread the love

நெட்ஃபிளிக்ஸின் ‘தி கிரேட் இந்தியன் கபில் ஷோ’ வில் பேசிய நடிகர் சல்மான் கான், நம்மில் பலர் தங்களது உடலை பராமரிக்க தினமும் உடற்பயிற்சி , யோகா , உணவில் கட்டுப்பாடு போன்றவை  விஷயங்களையும் பின்பற்றுகிறோம். எனது தந்தை சலீம், கான் தினமும் காலை நடைப்பயிற்சி செய்யும் பழக்கத்தை உடையவர் இந்த வயதிலும் இவ்வளவு தூரம் தினமும் நடைப்பயிற்சி செய்வதை நான் பார்த்து வியந்தேன் . என் குடும்பத்தாருக்கும் மிகவும் மகிழ்ச்சி. அவர் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது 2 அல்லது 3 பரோட்டாக்கள்  சாப்பிடும் பழக்கம் உடையவர்.

பிறகு சிறிதளவு சாதம் இறைச்சி உட்கொள்வார். அதன்பிறகு இனிப்பும் சாப்பிடுவார். இதை எல்லாம் சாப்பிட்டாலும் அவர் நல்ல ஆற்றல் மற்றும் ஆரோக்கியத்துடனும் உள்ளார் என்று கூறினார் சல்மான் கான். தொடர்ந்து கடுமையான உடற்பயிற்சி மற்றும் கடுமையான உணவுப் பழக்கங்களை பின்பற்றாமல் சீரான உணவு முறையை பின்பற்றுங்கள் என்று கூறினார். பலரும் உடற்பயிற்சிக்காக ஜிம்முக்கு செல்வதை விட்டுவிட்டு , குறைந்த உணவாய் சத்தான உணவாய் எடுத்துக்கொள்ளுங்கள் என்று அவர் கூறினார்.