Connect with us

தம்பி சாவிய புடிங்க.. இனி இந்த கார் உன்னோடது.. கூல் சுரேஷ்க்கு சர்ப்ரைஸ் கொடுத்த சேலம் RR பிரியாணி கடை ஓனர்..!

CINEMA

தம்பி சாவிய புடிங்க.. இனி இந்த கார் உன்னோடது.. கூல் சுரேஷ்க்கு சர்ப்ரைஸ் கொடுத்த சேலம் RR பிரியாணி கடை ஓனர்..!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த கூல் சுரேஷுக்கு சேலம் ஆர்ஆர் பிரியாணி ஓனர் கார் ஒன்றை கிப்டாக வழங்கி இருக்கின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் 2001 ஆம் ஆண்டு சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கூல் சுரேஷ்.

தமிழ் சினிமாவில் சந்தானம், சிம்பு, அஜித் உள்ளிட்ட பல நடிகருடன் சேர்ந்து இவர் நடித்த சிம்புவின் தீவிர ரசிகரான இவர் அவரது திரைப்படத்திற்கு இலவசமாகவே பிரமோஷன் செய்து வருவார். அதிலும் அவருடைய வெந்து தணிந்தது காடு சிம்புவுக்கு வணக்கத்தை போடு என்கின்ற டயலாக் மிகவும் பிரபலமானது. இதனை பலரும் பயன்படுத்தி வந்தார்கள்.

   

தமிழ் சினிமாவில் எந்த படங்கள் வெளியானாலும் அந்த படத்திற்கு முதல் நாள் முதல் காட்சி சென்று படம் பார்த்துவிட்டு விமர்சனம் கூறுவார். மேலும் எந்த படத்திற்கு செல்கிறாரோ அப்படத்திற்கு ஏற்றவாறு கெட்டப் போட்டுக் கொண்டு செல்வார். அது மிகவும் பிரபலமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட இவர் தன்னுடைய எதார்த்தமான பேச்சாளர் நல்ல வரவேற்பு பெற்றார்.

 

அந்த போட்டிகள் நிறைய நாட்கள் நீடித்தார். வீட்டை விட்டு வெளியில் வந்த பிறகு மீண்டும் சர்ச்சையாக பேசிக்கொண்டு உலா வரும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தானம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் எப்போதும் போல தனது பாணியில் பேசி இருந்தார். இவர் நற்பணி மன்றம் ஒன்றை வைத்து இருக்கின்றார். அதன் மூலம் சில உதவிகளை செய்து வருவதாக கூறப்படுகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய கட்சி ஒன்றை தொடங்க இருப்பதாக பேசியிருந்தார். சிஎஸ்கே என கட்சிக்கு பெயர் வைத்திருக்கும் இவர் விரைவில் கட்சியை அதிகாரப்பூர்வமாக ரிஜிஸ்டர் செய்து அறிவிப்பேன் என்றும் கூறியிருந்தார். மேலும் கட்சி தொடங்குவதால் சில நல்ல வேலைகளையும் செய்து வருகின்றார்,

சமீபத்தில் ஒரு நபருக்கு ஆட்டோ ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார். கூல் சுரேஷ் நற்பணி மன்றம் சார்பாக ஆட்டோ வாங்கி கொடுத்ததாக அந்த வீடியோவில் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது சேலம் ஆர்ஆர் பிரியாணி ஓனர் அவர்களை நேரில் சந்தித்தார். அப்போது அவர் கூல் சுரேஷ் அவர்களுக்கு புதிய கார் ஒன்றை வாங்கி பரிசாக அளித்து இருக்கின்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Behindwoods (@behindwoodsofficial)

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top