லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா நடிப்பில் உருவான லியோ படம் வருகிற 19-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. படம் ஆரம்பித்த நாள் முதலில் இருந்து எப்போது ரிலீஸ் ஆகும் என்ன ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர். இந்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. லியோ படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் போஸ்டர்களும், பாடல்களும் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்தது. லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு லியோ படத்தின் ட்ரெயிலர் வெளியானது.
ஆக்ஷன் டிரெய்லர் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் கொண்டாடத்தில் உள்ளனர். படம் வெளியாகும் நாளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கொண்டிருகின்றனர். இந்நிலையில் லியோ படத்திற்கு விஜய் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே லியோ படத்திற்கு நடிகர் விஜய் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக வதந்திகள் பரவியது.
ஆனால் உண்மையிலேயே விஜய் லியோ படத்திற்கு 120 கோடி தான் சம்பளம் வாங்கியுள்ளார். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திற்கு தான் விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஜினிகாந்தை தொடர்ந்து கோலிவுடில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது நடிகர் என்ற பெருமையை விஜய் பெற்றுள்ளார்.

