பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். மொத்தம் 24 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 7 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ளது. 98 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்ற நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் பவித்ரா, தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், விஷால், ரயான், சௌந்தர்யா இருந்த நிலையில் கடந்த வாரம் மஞ்சரி மற்றும் ராணவ் மற்றும் நேற்று அருண் ஆகியோர் வெளியேறினர். இந்த வாரத்தின் ஆரம்பமே அட்டகாசமாக இருந்தது. வீட்டை விட்டு வெளியேறி போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்தார்கள்.

அவர்களுடைய ஆட்டம் வெறித்தனமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் எதையுமே மாற்றவில்லை. இந்நிலையில் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் வீட்டை விட்டு அருண் வெளியேறினார். அதற்கு அடுத்ததாக இன்று தீபக் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் எலிமினேட் செய்யப்பட்டது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அருணின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் விளையாட அருண் ஒரு நாளைக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு வாரத்திற்கு ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை சம்பளம் வாங்கியுள்ளாராம்.
