“ஒரே இரவில் சடலமான நண்பர்கள்”… சுடுகாட்டில் தொங்கிய சடலம்…. சேலத்தை உலுக்கிய இரட்டை கொலை…. வெளிவரும் பகீர் காரணம்….!

Spread the love

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி மற்றும் ஓமலூர் அருகே, 15 வயது பள்ளி மாணவரும் அவரது 24 வயது நண்பரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஓமலூர் அருகேயுள்ள கருக்கல்வாடி ஊராட்சி கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த தறித் தொழிலாளி நாகராஜின் மகன் கவுசிக் (15). இளம்பிள்ளை அருகேயுள்ள கே.ஆர்.தோப்பு அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த இவர், மகுடஞ்சாவடி – இடங்கணசாலை சாலையில் உள்ள சித்தனூர் இரும்பாலைக்குச் சொந்தமான இடத்தில் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கவுசிக்கின் நெருங்கிய நண்பரான அதே கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த தறித் தொழிலாளி சிவராஜ் (24), ஓமலூர் தெசவிளக்கு பகுதியில் உள்ள சுடுகாட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த இந்த இரு மரணங்களும் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இவர்கள் இருவரும் செப்டம்பர் 18-ஆம் தேதி இரவு 9 மணியளவில் ஒன்றாக வீட்டை விட்டுச் சென்றது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தகவலறிந்த மகுடஞ்சாவடி மற்றும் ஓமலூர் காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் நேரில் சென்று தீவிர கள ஆய்வு மேற்கொண்டார். சிவராஜ், மாணவன் கவுசிக்கைக் கொலை செய்துவிட்டுப் பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது இருவரது மரணத்தின் பின்னணியிலும் வேறு ஏதேனும் கும்பல் உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடைபெற்ற பகுதிகள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வரும் காவல்துறையினர், இருவரின் மற்ற நண்பர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாக்கப்பட்ட பின்னரே மரணத்திற்கான முழுமையான காரணம் தெளிவுபெறும் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே இரவில் இரு நண்பர்கள் மர்மமான முறையில் உயிரிழந்த இச்சம்பவம் மகுடஞ்சாவடி மற்றும் ஓமலூர் வட்டாரப் பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.

Nanthini

Recent Posts

FLASH NEWS: சீமானுக்கு ஆதரவு கிடையாது…. கடைசி நேரத்தில் கைவிரித்த திமுக…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில்…

3 minutes ago

ஐயோ கொடுமையே… ரீல்ஸ் மோகத்தால் சீரழியும் இளைஞர்கள்… இந்தியாவை உலுக்கிய ஐ.எஸ்.ஐ-யின் அதிர்ச்சி வலைப்பின்னல்… இணையத்தில் வைரல்…!!

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஷெஹ்சாத் பாட்டி தலைமையிலான தீவிரவாத வலைப்பின்னல், இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து…

8 minutes ago

திடீர் திருப்பம்… ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறதா அதிமுக – பாஜக?…. ரூட்டை மாத்தும் தவெக…. பரபரப்பை கிளப்பிய நயினார் நாகேந்திரனின் அதிரடி அறிக்கை…!

ஆளுங்கட்சியின் நிர்வாக திறனின்மையை மூடிமறைக்கவே எதிர்க்கட்சிகள் மீது வீண் பழிகளைச் சுமத்துவதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமாக விமர்சித்துள்ளார்.…

8 minutes ago

மருத்துவமனையில் VS பாபு… 40 நாட்களாகத் தொடரும் மர்மம்…. வாய்திறக்க அஞ்சும் அமைச்சர்கள்….. வெளியான பரபரப்பு தகவல்….!

வி.எஸ். பாபு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர்…

13 minutes ago

குஷியோ குஷி…. தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ரேஷன் கடைகளிலும்… காலையிலேயே அரசு சூப்பர் குட் நியூஸ்….!

தமிழகம் முழுவதும் இன்று (நவம்பர் 6) அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

16 minutes ago

என் மகளின் உயிரை எடுத்தவளுக்கு எப்படி ஜாமீன்?… கதறும் தாயின் கண்ணீருக்கு… நீதி வழங்கிய உயர் நீதிமன்றம்…!!

ட்விஷா ஷர்மா மரண வழக்கில் முக்கியக் குற்றம் சாட்டப்பட்டவரான கிரிபாலா சிங்கின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

19 minutes ago