இந்த புகைப்படத்தில் தனது அப்பாவுடன் இருக்கும் குழந்தை தற்போது தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னி என்பது உங்களுக்கு தெரியுமா..?

By Priya Ram on ஜூலை 15, 2024

Spread the love

பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் அப்பொழுது சோசியல் மீடியாவில் வரலாகும். அந்த வகையில் நடிகை சாய்பல்லவி சிறு வயது புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் நடிகை சாய்பல்லவியின் சிறு வயது புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. முன்னணி நடிகையான சாய்பல்லவி பிரேமம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

   

அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது. தெலுங்கில் பிடா, லவ் ஸ்டோரி, ஷாம் சிங்காராய் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழில் ஏ.எல் விஜய் இயக்கிய தியா படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு தனுஷுக்கு ஜோடியாக மாரி 2 படத்தில் நடித்தார். அந்த படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.

   

 

சாய்பல்லவி மற்றும் தனுஷின் நடனம் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ள மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி தனது அப்பாவுடன் இருக்கும் சிறு வயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அவருக்கு அறுபதாவது பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சாய் பல்லவியின் 10 வருட காதலர் இவர்தான் - யார் தெரியுமா? - தமிழ்நாடு

அவர் கூறியதாவது, தன்னை உறுதியான பெண்ணாக வளர்த்த அப்பாவுக்கு நன்றி. அன்பான அப்பா எங்களுக்கு அமைதியான வாழ்க்கை வழங்குவதற்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி. மிகவும் மென்மையையும் வலிமையையும் கொண்டவளாகவும் வளர்த்ததற்கு நன்றி. உங்கள் சிறந்த வாழ்க்கை எனக்கும் பூஜாவுக்கும் என்றென்றும் ஊக்கமளிக்கும் என பதிவிட்டுள்ளார். சாய் பல்லவியின் சிறுவயது போட்டோவை பார்த்த ரசிகர்கள் க்யூட்டாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகை சாய் பல்லவியின் 10 வருட காதல் கதை: காதலன் யார் தெரியுமா? | Actres Saipallavi Opens Up About Her 10 Years Love