கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் அமரன். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு கௌதம் கார்த்திக் நடித்த ரங்கூன் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இது தவிர பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைரக்டராகவும் ராஜ்குமார் பெரியசாமி பணியாற்றியுள்ளார். அப்போது கமல்ஹாசன் உடன் கிடைத்த நட்புக்கு பரிசாக கிடைத்தது தான் அமரன் திரைப்பட வாய்ப்பு. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் திரைப்படம் இதுதான். இவர் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ள நிலையில் ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியானது.
இந்த படத்தில் சாய் பல்லவி வரும் காட்சிகள் அவ்வளவு அழகாக உள்ளது. கதைக்கு அழகு சேர்க்கும் வகையில் காதலை நமக்குள் உணர வைக்கும் விதமாக சாய் பல்லவி மிக அருமையாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த நிலையில் படத்தின் பிரமோஷனும் படு பயங்கரமாக நடந்து வரும் நிலையில் சாய்பல்லவி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இது குறித்த அவர் பேசுகையில், அமரன் திரைப்படத்தில் இந்து கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் தயங்கிக் கொண்டிருந்தேன். தன் தயக்கத்தை ராஜ்குமார் பெரியசாமி இடம் சொல்லியபோது நீங்கள் இந்துவை சந்தித்து பேசிவிட்டு வந்து ஸ்கிரிப்டை மீண்டும் படியுங்கள் என்று கூறினார்.
பிறகு இந்துவை பார்த்ததும் நான் இந்த படத்தில் நிச்சயம் நடிக்கிறேன் என்று கூறிவிட்டேன். ஆனால் கூடவே ஒரு கண்டிஷன் போட்டேன். பயோபிக், அதுவும் ஹீரோவை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் நீளமாக இருக்கிறது என்று நினைத்தால் ஹீரோயின் வரும் காட்சிகளை தான் வெட்டி தூக்கி போட்டு விடுவார்கள். என்னுடைய கதாபாத்திரத்தை அப்படி செய்ய மாட்டேன் என்று எழுதிக் கொடுங்கள் நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என கூறிவிட்டேன். இதனைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி கையெழுத்து போட்டுக் கொடுத்த பிறகு தான் அந்த திரைப்படத்தில் நான் நடித்தேன் என சாய் பல்லவி கூறியுள்ளார்.