#image_title
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். சினிமாவில் ராகவா லாரன்ஸின் நடன திறமையை பார்த்து ரஜினிகாந்த அவரை நடனப்பள்ளியில் சேர்த்து விட்டார். அதன் பிறகு பல திரைப்படங்களில் குருப் டான்சராக பணியாற்றிய இவர் சிரஞ்சீவி நடித்த ஹிட்லர் திரைப்படம் மூலமாக இவருக்கு நடன இயக்குனராக வாய்ப்பு கிடைத்தது.
#image_title
அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் பல திரைப்படங்களில் நடந்த இயக்குனராக மாஸ் காட்டியிருக்கிறார். 2004 ஆம் ஆண்டு வெளிவந்த முனி என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து காஞ்சனா சீரியஸை தொடர்ந்து இயக்கி வருகிறார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் ஜிகர்தண்டா 2 இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.
#image_title
இதனிடையே சினிமாவில் பிஸியாவா இருக்கும் ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ஏகப்பட்ட நல உதவிகளை செய்து வருகிறார். அவர்களை பாதுகாத்து வளர்ப்பது, படிக்க வைப்பது போன்ற சேவைகளை லாரன்ஸ் அறக்கட்டளை மூலமாக செய்து வருகிறார்.
#image_title
இந்நிலையில் இவர் அடுத்ததாக, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் பென்ஸ் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தினை பாக்யராஜ் கண்ணன் இயக்கப் போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் திரைப்படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயன்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…
அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…
பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…