மேடை பாடகராக இருந்தவரை சினிமாவில் பாட வைத்த A.R ரகுமான்.. இந்த சூப்பர் ஹிட் பாடல்கள் அவர் பாடியதா..?

By Priya Ram on அக்டோபர் 12, 2024

Spread the love

பிரபல பாடகரான சாகுல் ஹமீது தூத்துக்குடியில் பிறந்தவர். இவர் பல மேடை கச்சேரிகளில் பாடியுள்ளார் 80-களில் ஆரம்பத்தில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இசைத்தென்றல் என்ற பாடும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு சாகுல் ஹமீது 30-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். மேடைகளில் பாடிய சாகுல் ஹம்தின் குரல் ஏ ஆர் ரகுமானுக்கு மிகவும் பிடித்து விட்டது.

   

இதனால் தனது படங்களில் பாடுவதற்கு ஏ.ஆர் ரகுமான் சாகுல் ஹமீதுக்கு வாய்ப்பு கொடுத்தார். ஏ.ஆர் ரகுமான் இசையில் ராகுல் ஹமீது பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். கடந்த 1993-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ஜென்டில்மேன் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் உசிலம்பட்டி பெண் குட்டி என்ற பாடலை சாகுல் ஹமீது பாடி பிரபலமானார்.

   

 

அதன் பிறகு பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் இடம்பெற்ற எதுக்கு பொண்டாட்டி என்ற பாடலை பாடினார். உழவன் திரைப்படத்தில் இடம்பெற்ற மாரி மழை பெய்யாதோ என்ற பாடலை பாடினார். அதன்பிறகு திருடா திருடா படத்தில் ராசாத்தி என் உசுரு என்ற பாடலை பாடினார்.

அதிலும் வண்டிச்சோலை சின்ராசு படத்தில் இடம்பெற்ற செந்தமிழ் நாட்டு தமிழச்சி என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு மே மாதம் படத்தில் இடம்பெற்ற மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன், சிந்து நதி பூ படத்தில் இடம் பெற்ற ஆத்தாடி என்ன உடம்பு அங்கங்க பச்சை நரம்பு ஆகிய பாடல்களை பாடினார். அவரது குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.