அடச்சீ… போயும் போயும் இப்படியா பண்ணுவீங்க?… ஓடும் ரயிலில் பெண்ணிடம் ஆபாச செய்கை செய்த நபர்… கதறியபடி ட்வீட் செய்த பெண்…!

By Visaka on ஆனி 30, 2026

Spread the love

ரயில் பயணங்களின்போது பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்களை மீண்டும் ஒருமுறை இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் தீவிரமாக்கியுள்ளது. SMVT எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 15228) ரயிலில் பயணம் செய்த பெண் ஒருவர், மற்றொரு ரயிலின் பொதுப் பெட்டியில் (ஜெனரல் கோச்) கதவருகே நின்று கொண்டிருந்த பயணி ஒருவர் தனக்கு எதிராக ஆபாசமான செய்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். டன்குனி சந்திப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த நபரின் புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே நிர்வாகத்திற்கு சமூக ஊடகங்கள் வாயிலாகக் கோரிக்கை விடுத்தார். இந்த விவகாரம் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைப் பதிவு செய்துள்ளதாக ‘ரயில்வே சேவா’ (Railway Seva) அமைப்பு தெரிவித்துள்ளது.

https://x.com/GhumakkadLaali/status/2071614986259202085?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2071614986259202085%7Ctwgr%5E1157259e515bd51af0f99d8629af0447c0edc268%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.freepressjournal.in%2Fviral%2Fpotential-rapist-woman-alleges-co-passenger-made-lewd-gestures-on-smvt-express-seeks-action-against-him-video

   

இந்தச் சம்பவம் இணையவாசிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பொதுப் போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்த லட்சணத்தில் உள்ளது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. புகைப்படத்தில் இருக்கும் நபரைக் கண்டறிந்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வரும் வேளையில், “ஏன் அந்தப் பெண் கதவருகே நின்றார்?” என்று கேள்வி கேட்பவர்களுக்கும் நெட்டிசன்கள் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்டப்பட வேண்டும் என்றும், இந்திய ரயில்வேயில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடுதல் பாதுகாப்புப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.