பிரபல நடிகையான சரிதா கடந்த 1978-ஆம் ஆண்டு ரிலீசான அவள் அப்படித்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பிறகு அவள் அப்படித்தான், தப்பு தாளங்கள், பொண்ணு ஊருக்கு புதுசு, தைப்பொங்கல், நெற்றிக்கண், தண்ணீர் தண்ணீ், அஞ்சாத நெஞ்சங்கள், கோயில் புறா, புதுக்கவிதை, அச்சமில்லை, வேதம் புதிது உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் சரிதா நடித்துள்ளார்.தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் சரிதா நடித்துள்ளார்.

சிறந்த நடிகைக்கான விருது சரிதாவுக்கு மூன்று முறை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்கினார். அருண் விஸ்வா தயாரித்தார். மாவீரன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. மாவீரன் திரைப்படத்தில் நடித்ததற்காக சரிதாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான சைமா விருது கொடுக்கப்பட்டது. இவர் இதுவரைக்கும் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நான் ஏன் இதுவரை சினிமாவை விட்டு விலகியிருந்தேன் என்பதற்கான காரணத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது, தன்னுடைய 16 வயதில் முதல் திருமணம் செய்துக்கொண்டவருக்கு அந்த வாழ்க்கை சரியாக அமையாததால் நடிகையானேன். அப்போது 1988 ஆம் ஆண்டு மலையாள நடிகர் முகேஷ் என்பவரை திருமணம் செய்தேன். அப்போதுதான் எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. காரணம் முகேஷ் தினமும் குடித்துவிட்டு பல பெண்களுடன் தொடர்பில் இருந்தார்.

அந்த பெண்களையும் அழைத்துக்கொண்டு வீட்டில் உல்லாசமாக நடந்துகொண்டார். அதை தட்டிக்கேட்ட என்னை கர்ப்ப காலம் என்றும் பாராமல் வயிற்றில் எட்டி உதைத்தார். தன் மாமனார் மீதிருந்த மரியாதையை காரணமாக 23 ஆண்டுகாலம் அவரோடு குடும்பம்நடத்தினேன் . என் பிள்ளைகள் பெரியது ஆனதும் விவாகரத்து செய்துவிட்டு வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
