கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்கள் தொடர்ந்து சபரிமலைக்கு படையெடுப்பது தான் வழக்கம். வழக்கத்தை விட இந்த வருடம் பக்தர்களின் கூட்டம் சபரிமலையில் அலை மோதுகிறது. இதனிடையே சபரிமலை கோவிலில் இந்த சீசனுக்கு சென்ற தமிழக பக்தர்கள் உட்பட 19 பேர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர். தற்போது மற்றொரு சோக நிகழ்வாக கோவில் சன்னிதான பகுதியில் டிராக்டர் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் படுகாயம் அடைந்துள்ளன. அதில் இரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
