வாலி படத்துக்கு சம்பளமே கிடையாது… அடுத்த படத்துக்கு வாங்கிய சம்பளத்தை வைத்து எஸ் ஜே சூர்யா என்ன செய்தார் தெரியுமா?

By vinoth

Updated on:

இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் வில்லன் நடிகராக வலம் வருகிறார் எஸ் ஜே சூர்யா. அவர் வில்லனாக நடித்த மாநாடு, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களின் அவரின் மிரட்டலான நடிப்புக்காகவே பாராட்டப்பட்டன. இதையடுத்து இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக அடுத்தடுத்து கமிட்டாகி வருகிறார்.

தமிழ் சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையோடு வந்த எஸ் ஜே சூர்யா முதலில் பாரதிராஜா மற்றும் இயக்குனர் வசந்த் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அஜித் ஆசை படத்தில் நடிக்கும் அதில் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ் ஜே சூர்யாவின் அர்ப்பணிப்பை பார்த்துவிட்டு அவருக்கு தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார்.

   

 

அப்போது அஜித்துக்காக அவர் உருவாக்கிய கதைதான் வாலி. அந்த படம் நீண்ட நாட்கள் படப்பிடிப்பில் இருந்தது. அந்த படத்தின் வாய்ப்பை அவருக்கு கொடுத்ததால், அவருக்கு என்று சம்பளம் எதுவும் கொடுக்கவில்லையாம் தயாரிப்பாளர். தினமும் செலவுக்கு 50 ரூபாய் மட்டும் கொடுப்பார்களாம். இதை அந்த படத்தில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அந்த படம் ஹிட்டானதும் அஜித் அவருக்கு ஒரு காரை வாங்கி பரிசாக அளித்தாராம்.  வாலி படம் ஹிட்டானதால் அடுத்த படமான குஷி படத்தை இயக்க அவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது. அந்த சம்பளத்தின் முன்பணத்தை வாங்கி எஸ் ஜே சூர்யா வாலி படத்தில் தனக்கு உதவியாளராக பணியாற்றிய அனைவருக்கும் இரு சக்கர வாகனம் வாங்கிக் கொடுத்துள்ளார்.

அது மட்டுமில்லாமல் ஒரு மிகப்பெரிய தொகையை வேளாங்கண்ணி கோயில் உண்டியலில் போட்டுவிட்டாராம். இதையும் மாரிமுத்து அந்த நேர்காணலில் கூறியுள்ளார். அதன் பிறகு குஷி படத்தை இயக்கி அதன் பிளாக்பஸ்டர் ஹிட்டால் அந்த படத்தை தெலுங்கு மற்றும் இந்தி என அடுத்தடுத்து இயக்கி வெற்றி இயக்குனராக வலம் வந்தார். அதன் பின்னர் தன்னுடைய நடிப்பாசைக்கு உயிர்கொடுக்கும் விதமாக நியூ படத்தை இயக்கி நடிகராக அறிமுகமானார்.

author avatar