ஐயோ கடவுளே… 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… என்கவுண்டரில் தீர்த்துக்கட்டப்பட்ட கொடூரக் கடத்தல்காரன்… பாகிஸ்தானில் நடந்த பகீர் சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 14, 2026

Spread the love

பாகிஸ்தானின் ராவல்பிண்டி பகுதியில், இரவின் இருளில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று கொடூரமான வன்கொடுமைக்கு ஆளாக்கிய ‘கலூ முமரேஸ்’ என்ற நபர் காவல்துறையினருடனான என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுமிக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி அந்தப் பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த திடீர் என்கவுண்டர் சம்பவம் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.

சம்பவம் குறித்து பலரும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். குற்றவாளி எத்தகைய குற்றத்தைச் செய்திருந்தாலும், உடனடியாக என்கவுண்டரில் கொல்லப்படுவதற்குப் பதிலாக, சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு முறையான தீவிர விசாரணை மற்றும் உரிய தண்டனை பெற்றுத் தரப்பட்டிருக்க வேண்டும் என்பதே பலரின் வாதமாக உள்ளது. முறையான நீதித்துறை மூலமாக குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அது எதிர்காலத்திற்கு ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்கும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

   

https://twitter.com/SalehMughal/status/2109792525238358469/video/1

   

என்றாலும், இதுபோன்ற கொடூரச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற குரல்களும் மறுபுறம் வலுத்து வருகின்றன. சட்டம் மற்றும் நீதித்துறையின் தாமதமான நடைமுறைகளால் குற்றவாளிகள் எளிதில் தப்பிவிட வாய்ப்புள்ளதாகக் கருதும் ஒரு பிரிவினர், இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் அவசியமானது என்று வாதிடுகின்றனர். எவ்வாறாயினும், இச்சம்பவம் சட்டம்-ஒழுங்கு மற்றும் துரித நீதி வழங்குவது குறித்த பல்வேறு விவாதங்களை மீண்டும் பொதுவெளியில் எழுப்பியுள்ளது.