“6 மாதங்களில் 4,400 போன் கால்கள்” கொலைக்கு முன் ஹேப்பி நடனம்.. காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவரை பள்ளத்தாக்கில் தள்ளிய கொடூர மணப்பெண்.. வெளியான திடுக் பின்னணி..!!

By Soundarya on ஆனி 25, 2026

Spread the love

பூனாவில் நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் சியா கோயல் (20), தனது காதலர் சேத்தன் சௌத்ரி (22) உடன் சேர்ந்து, தொழிலதிபர் கேதன் அகர்வாலை லோஹகாட் கோட்டைப் பள்ளத்தாக்கில் தள்ளி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் உதய்பூரில் ஆடம்பரமாகத் திருமணம் நடக்கவிருந்த நிலையில், காதலுக்காக சியா இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

போலீஸ் விசாரணையில், சியாவும் சேத்தனும் கடந்த 6 மாதங்களில் 4,400 முறை பேசி கொலைத் திட்டத்தைத் தீட்டியது தெரியவந்துள்ளது. ஜூன் 18 அன்று, தனது பிறந்தநாளில் காதலனைச் சந்தித்து, கேதனை கோட்டைக்கு அழைத்துச் சென்று சியா கொலை செய்துள்ளார்; முன்னதாக, பாலி பயணத்தைத் தவிர்க்க கேதனின் பாஸ்போர்ட்டையும் அவர் மறைத்து வைத்துள்ளார்.

   

கேதன் தவறி விழுந்துவிட்டதாக முதலில் நாடகமாடிய சியா, பின் உண்மையை ஒப்புக்கொண்டார். கொலைக்குச் சில மணி நேரங்களுக்கு முன் கேதனும் சியாவும் மகிழ்ச்சியாக நடனமாடிய வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன, இருவரும் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர்.