“45°C வெயில்.. நடுவில் தகிக்கும் நெருப்பு.. புஷ்கரில் மிரட்டும் ரஷ்யப் பெண்… மெய்சிலிர்க்க வைக்கும் ‘அக்னி தவம்’… வைரல் வீடியோ”..!!!

By Muthu Mani on வைகாசி 12, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலத்தின் புனித தலமான புஷ்கரில், ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் மேற்கொண்டு வரும் கடும் தவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரையிலான சுட்டெரிக்கும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், அவர் தினமும் தனது உடல் முழுவதும் திருநீறு (பஸ்மம்) பூசிக்கொண்டு, தன்னைச் சுற்றி ஒன்பது இடங்களில் நெருப்பு மூட்டி (9 தூணி அக்னி தவம்) 21 நாட்களாக இந்த மிகக்கடினமான தவத்தை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய இந்த அக்னி தவமானது வரும் மே 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆன்மீகத்தின் மீது கொண்ட அதீத ஈடுபாட்டினால், கடும் வெப்பத்தையும் உடலை வாட்டும் அக்னி ஜூவாலையையும் சகித்துக்கொண்டு அவர் செய்யும் இந்த மன உறுதிமிக்க தவம், புஷ்கருக்கு வரும் பக்தர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் பக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.