லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த பாடத்தில் நாகர்ஜுனா ஸ்ருதிஹாசன், அமீர்கான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கூலி திரைப்படத்தில் நடித்தது மிகப்பெரிய தவறு என அமீர்கான் கூறியதாக செய்திகள் உலா வருகிறது. அதில், உண்மையான கதாபாத்திரம் என்னவென்று புரியவில்லை.
ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்காக அந்த கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டேன். படத்திற்கு வந்து 1,2 டயலாக் பேசினேன். எனது கதாபாத்திரம் மோசமாக எழுதப்பட்டிருந்தது. இவ்வளவு பெரிய எதிர்வினை கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. கூலி படத்தில் நடித்தது மிகப்பெரிய தவறு என அமீர்கான் சொன்னதாக தகவல் வெளியானது. ஆனால் அமீர்கான் தரப்பில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
