அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி… வீடியோ போட்ட 16 மணி நேரத்தில்… 75 லட்சம் ரூபாய் வசூல்… நெகிழ்ச்சியில் பெற்றோர்…!!

Spread the love

கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த கோவில் பூசாரி ஒருவருடைய ஐந்து வயது மகள் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனை அடுத்து அவரை பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தபோது அவருக்கு உடனடியாக எலும்பு மஜ்ஜை  மாற்று அறுவை சிகிச்சை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்கள். மேலும் இந்த அறுவை சிகிச்சைக்கு 40 முதல் 60 லட்சம் செலவாகும் என்று அவர்கள் கூறியுள்ளார்கள். பாதிக்கப்பட்ட சிறுமியை பல ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்ததில் 7 லட்சம் வரை செலவானால் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்துள்ளார்.

இதனையடுத்து தனக்கு தெரிந்தவர்கள் மூலம் ஏதாவது உதவி கிடைக்குமா? என்று விசாரித்துள்ளார். அப்பொழுது அவருடைய நண்பர் ஒருவர் பயாஸ் என்பவரின் செல்போன் நம்பர் கொடுத்து உடனடியாக உதவி கேட்க கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பயாஸ் கோவில் பூசாரி வீட்டிற்கு வந்து சிறுமியை சந்தித்து ஒரு வீடியோவை உருவாக்கி கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி மாலை 6 மணி அன்று அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உதவி கேட்டுள்ளார். இதனை அடுத்து மறுநாள் காலை 10:30 மணிக்கு 75லட்சம் ரூபாய் வசூல் ஆகி உள்ளது. வீடியோ வெளியிட்ட சுமார் 16 மணி நேரத்தில் சிறுமியின் சிகிச்சைக்கு 75 லட்சம் ரூபாய் வசூல் ஆனது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இதனை அடுத்து அந்த குழந்தைக்கு ஓரிரு நாட்களில் சிகிச்சை தொடங்கப்பட உள்ளது.

Soundarya

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

5 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

5 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

6 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

6 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

7 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

7 மணத்தியாலங்கள் ago