EPFO வழங்கும் காப்பீடு திட்டம்…! ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7 லட்சம் கிடைக்கும்…. முழு விவரம் இதோ….!!

By Devi Ramu on கார்த்திகை 26, 2025

Spread the love

தனியார் துறையில் பணிபுரியும் பிஎஃப் (PF) கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு, EDLI (Employees’ Deposit Linked Insurance) திட்டம் மூலம் ரூ. 7 லட்சம் வரை இலவச காப்பீடு கிடைக்கிறது. இந்த காப்பீட்டுக்காக ஊழியர்கள் எந்தப் பணத்தையும் செலுத்த வேண்டியதில்லை; ஊழியரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 0.50% தொகையை நிறுவனமே செலுத்துகிறது.

ஒரு ஊழியர், நோய், விபத்து அல்லது இயற்கையான மரணம் என எந்தக் காரணத்தால் இறந்தாலும், அவருடைய நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசுகள் இந்தக் காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ. 2.5 லட்சமும், அதிகபட்சமாக ரூ. 7 லட்சமும் காப்பீடாக வழங்கப்படுகிறது.

   

காப்பீட்டுத் தொகையைத் தீர்மானிக்க, ஊழியரின் கடந்த 12 மாத சம்பளம், அகவிலைப்படி மற்றும் பிஎஃப் கணக்கில் உள்ள இருப்பு ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். நிறுவனத்தின் பங்களிப்புக்கு அதிகபட்ச அடிப்படை சம்பள வரம்பு ரூ. 15,000 மட்டுமே. ஊழியரின் சம்பளம் இதைவிட அதிகமாக இருந்தாலும், ரூ. 15,000 அடிப்படையிலேயே நிறுவனத்தின் பங்களிப்பு கணக்கிடப்படும்.

   

நாமினியை நியமிக்காமல் ஊழியர் இறந்திருந்தால், அவருடைய மனைவி, திருமணமாகாத மகள்கள் மற்றும் மைனர் மகன்கள் இந்த நன்மையைப் பெறத் தகுதியுடையவர்கள். இந்தத் தொகையை ஒரே தவணையாகப் பெற, Form-5IF என்ற காப்பீட்டுப் படிவத்தை நிறுவனத்திடம் சமர்ப்பித்துச் சரிபார்க்க வேண்டும். இந்தத் திட்டம் ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய நிம்மதியை அளிக்கிறது.