ரூ.5,000 – ரூ.10,000.. அமைச்சர் அறிவித்த அந்த குட் நியூஸ்… தமிழகத்தில் மகிழ்ச்சி அறிவிப்பு…..!

By Nanthini on வைகாசி 25, 2026

Spread the love

திமுக ஆட்சியில் கனரக வாகனங்களுக்கான ‘விஎல்டிடி’ (VLTD) எனப்படும் லோகேஷன் கண்டறியும் கருவிகளை குறிப்பிட்ட 4 நிறுவனங்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என அதிகாரிகள் நிர்பந்திப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது வாகன உரிமையாளர்களுக்குப் பெரும் நிம்மதியளிக்கும் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இக்கருவிகளை தங்களுக்கு விருப்பமான எந்த நிறுவனத்திடம் இருந்தும் தாராளமாக வாங்கிக் கொள்ளலாம் என அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த அதிரடி உத்தரவின் காரணமாக, சந்தையில் ஏற்பட்ட ஆரோக்கியமான போட்டியால் விஎல்டிடி கருவிகளின் விலை கணிசமாகக் குறைந்து, வாகன உரிமையாளர்களுக்கு சுமார் ₹5,000 முதல் ₹10,000 வரை செலவு மிச்சமாகியுள்ளது. அரசின் இந்த வெளிப்படையான மற்றும் சாதகமான முடிவால் கூடுதல் சுமை குறைந்துள்ளதால், தமிழக லாரி மற்றும் கனரக வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் தங்களது மிகுந்த மகிழ்ச்சியையும் வரவேற்பையும் தெரிவித்து வருகின்றனர்.