மகளிர் வங்கி கணக்கில் ரூ.5,000… ஸ்டாலின் சொன்ன HAPPY NEWS… தமிழகத்தில் அடுத்த அதிரடி…!

By Nanthini on பங்குனி 30, 2026

Spread the love

தமிழகத் தேர்தல் களத்தில் அனல் பறக்கும் பிரச்சாரங்களுக்கு இடையே, திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே பெண்களின் வங்கித் கணக்குகளில் 3 மாத நிலுவைத் தொகை மற்றும் ரூ.2,000 கோடைக்கால சிறப்பு நிதி என மொத்தம் ரூ.5,000 “சர்ப்ரைஸாக” டெபாசிட் செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், இத்திட்டத்தைப் பயனில்லாமல் செய்ய பாஜக சதி செய்ததாகவும், அந்த முட்டுக்கட்டைகளைத் தகர்த்தே இந்த நிதி விடுவிக்கப்பட்டதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மேலும், வரும் காலத்தில் இந்த மகளிர் உரிமைத் தொகையை ₹1,000-லிருந்து ₹2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்ற அதிரடி வாக்குறுதியை அளித்து, பெண் வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.