செல்லப் பிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்கே உரிமம் பெற சென்னை மாநகராட்சி ஒரு மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் அதிமுக மாமன்ற குழு தலைவர் சதீஷ்குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது, பெருந்தலைவர் காமராஜர் நகரில் கடந்த மூன்று வருடங்களாக வைத்த கோரிக்கையை இதுவரை சரி செய்யவில்லை. அதனால் அங்கு எந்த பணியும் சரியாக நடைபெறவில்லை. நெமிலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்ததாக கூறினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். கூட்டத்தில் தற்போது பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி மாநகராட்சி கூட்டத்தில் செல்லப் பிராணிகள் உரிமம் பெறுவதற்கு நிபதனைகள் விதிக்கப்படுகின்றன. செல்லப் பிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயம். இதற்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 24ஆம் தேதிக்குள் உரிமம் பெற வேண்டும். அப்படி பெற தவறும் பட்சத்தில் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பூங்காக்கள் மற்றும் நடைபாதைகள் என பிற பகுதிகளில் கழுத்துப்பட்டை இல்லாமல் நாய்களை அழைத்து வந்தால் உரிமையாளர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது
