காலையிலேயே வந்த குட் நியூஸ்… ரேஷன் கார்டுக்கு ரூ.5000?… முதல்வர் ஸ்டாலின் போட்ட ஆர்டர்…!

By Nanthini on ஆவணி 28, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே மக்களை கவரும் வகையில் அனைத்து கட்சியினரும் வாக்குறுதி வழங்கி வருகிறார்கள். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகை வழங்காததால் திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 2026 பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு 5000 ரூபாய் வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் பரவியது. இதனை உறுதி செய்யும் விதமாக நிதி ஆதாரத்தை தயார் செய்ய நிதி துறையிடம் அரசு அறிவுறுத்தியுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தற்போது தெரிவித்துள்ளன. இது குறித்து அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.