அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.5,000… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்…!!

By Soundarya on மார்கழி 10, 2025

Spread the love
2021 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியின் போது பொங்கல் பரிசாக ₹2,500 வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து மக்களுக்குப் பயனளிக்கும் எந்தவொரு நல்ல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், வரவிருக்கும் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ₹5,000 வழங்க வேண்டும் என்றும் அவர் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.